யாழ்.பல்கலையில் பாரிய சுற்றிவளைப்பு: மாணவர் ஒன்றியத் தலைவர்’செயலாளர் கைது!

0
611

யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர்’செயலாளர் பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிவளைத்து அங்குள்ள மாணவர் விடுதிகள் ‘கற்கை நெறி கூடங்கள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை தமிழீழ தேசியத்தலைவரதும்’தமிழீழவிடுதலைப்புலிகளின் புகைப்படங்கள்’தொலைநோக்கு கருவி’இராணுவ சப்பாத்து இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்வதாயின் வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என கூறியிருந்த கிழக்கு ஆளுநரை இவ்வளவு நாளிற்குள் கைது செய்திருந்தால் 21/04/2019 உயிர்த்த ஞாயிறு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களை தவிர்த்திருக்கலாம்.

21/04/2019 இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களிற்கு பின்னரான சுற்றுவளைப்புகளின் போது ஆளுனர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி அலுவலகத்தில் சில ஆயுத உபகரணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் இவ்வாறான கைதுகள் தமிழ்மக்கள் மத்தியில் அடக்கு முறைகளை ஏற்படுத்தி தமிழர்களின் தேசிய உணர்வுகளை சிதைத்து ஐனநாயகம் என்று சொல்லப்படும் இந் நாட்டில் இவ்வாறான கைதுகள் தொடர்பில் தமிழ்மக்கள் தெளிவான பார்வையை கொண்டிருக்க வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. போன்ற விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மருத்துவப் பீட உள்ளக பயிற்சி இறுதி ஆண்டு மாணவர்களின் விடுதி இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் மற்றும் மாணவர் விடுதி உட்பட கற்கை நிலையங்கள் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here