பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு!

0
631

அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகமும் , பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் – இணைந்துநடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு கடந்த 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கார்லே கோணேஸ் என்னும் பிரதேசத்தில் (EspaceAssociatif des Doucettes ) இடம்பெற்றிருந்தது.

வரவேற்பு ஒளியை போட்டி நடுவர்கள்  ஏற்றி வைக்க மங்கல விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது.

கார் லே கோணேசு முதல்வர் அவர்கள் , தமிழர்ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச்சோலைத்தலைமைப் பணியகப்பொறுப்பாளர் திரு .ஜெயக்குமாரன் மற்றும் ஆற்றுகை வெளிப்பாட்டுக்கு வருகைதந்த நடுவர்களும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

மாவீரர்களுக்கும், மக்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுடன் கடந்த13 ம் நாள் ஜேர்மனி நாட்டில் சாவடைந்த முனைவர்.  சின்னத்துரை கமலநாதன் மற்றும் 15ம் திகதி பிரான்சு பாரிசில் மாரடைப்பால் சாவடைந்த தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவின்  மூத்தசெயற்பாட்டாளர்களில் ஒருவரான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளரும், செயலாளருமாகிய திரு. காணிக்கைநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிப்புச் செய்திருந்தார்.

தொடக்கவுரையை மாநகர முதல்வர் ஆற்றியிருந்தார். தமிழர்கலையையும் பண்பாட்டையும் மொழியையும் தான் பெரிதாக விரும்புவதாகவும். தொடர்ந்தும் பணிசிறக்க வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

தொடர்ந்து வாய்ப்பாட்டு ஆசிரியர் திருவாட்டி அம்பிகை பாலகுமார் அவர்களின் மாணவி செல்வி பிருந்தா நடராஜா அவர்களும் . வாய்ப்பாட்டு ஆசிரியர் திருவாட்டி தேவமனோகரி சுரேந்திரன்  அவர்களின் மாணவி செல்வி சிந்துஜா சகாதேவன் அவர்களும், நடன ஆசிரியர் திருவாட்டி கௌசல்யா ஆனந்தராஜா அவர்களின் மாணவி செல்வி தாட்சாயினி தங்கத்துரை ( நியூலி சூ மார்ன் தமிழ்ச்சோலை) நடன ஆசிரியர் திருவாட்டி மோகனரூபி தில்லைரூபன் அவர்களின் மாணவி செல்வி ஜெனின் சிராணி காணிக்கைநாதன் (குசன்வீல் தமிழ்ச்சோலை) தேர்வில் பங்குகொண்டிருந்தனர்.

தேர்வு நடுவர்களாக ஜேர்மனி பிரதீஸ்வரா நாட்டியாலய நிறுவனர் ஆசிரியர் நடனக்கலைமணி, கலைமாணி பேராதனை வளாகம், கல்வியியல் டிப்ளோம் யாழ். வளாகம் திருவாட்டி வசுந்தரா சிவசோதி அவர்களும் , நாட்டிய கலாரத்னா  பாரதிதாசன் பல்கலைக்கழகம் எம்.ஏ,தஞ்சாவூர் பல்கலைக்கழகம் எம். பி. திருவாட்டி சாவித்திரி சரவணன் அவர்கள் -ஜேர்மனி, இசைக்கலைமணி யாழ். பல்கலைக் கழகம் திருவாட்டி கலாராணி குலசபாநாதன் – சுவிற்சர்லாந்து.  இசைக்கலைமணி யாழ். பல்கலைகழகம்,

இளங்கலைமாணி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்,முதுகலைமாணி தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் – சுவிற்சர்லாந்து, கலாவித்தகர் வட இலங்கை சங்கீத சபை நடன ஆசிரியை திருவாட்டி தாரணி சிறீதரன் அவர்கள் – பிரான்சு,சங்கீத வித்துவான் இசைக்கலைமணி தமிழ்நாடு இசைக்கல்லூரி திருவாட்டி. அன்ரன் நொயலா அவர்கள் – கடைமையாற்றியிருந்தனர்.

மாலை 19.00 மணிவரை ஆற்றுகை வெளிப்பாட்டுத்துறை தேர்வு இடம்பெற்றன. மண்டபம் நிறைந்த மக்களுடன் தேர்வு நடைபெற்றது.

அணிசேர் கலைஞர்களாக சங்கீத கலாநிதி திரு. சுஜம்புகரிகரன், மிருதங்கம் திரு. பிரதாப் ராமச்சந்திரா, வயலின் திருமதி கோமளா கந்தையா அவர்களும், நுண்கலை மாமணி திருவாட்டி தர்மிகா முரளிதரன், ஆற்றுகைத் தேர்வு நடன மாணவர்களும்  தமது குருவின் நட்டுவாங்கத்துடன் உருப்படிகளாக புஸ்பாஞ்சலி, வர்ணம் , தில்லானா , விநாயகர்ஸ்துதி, பதம் போன்றவற்றையும் வழங்கினர். வாய்ப்பாட்டுக்குச் செல்வன் சே. விநோசாந், திரு. பில்ப் அன்ரு மிருதங்கத்தையும், மோர்சிங் செல்வன் விஜயகுமார் நிதர்சன், வயலினை செல்வன் சார்ல் பரமேஸ்வரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரையை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனத்தின் பொறுப்பாளர்- (சுவிஸ்), திரு.சங்கர் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர்தனது உரையில்  இன்றைய இந்த நடன ஆற்றுகைத்தேர்வு ஓர் இக்கட்டான நிலைக்குள்  தான் செய்யப்படுகின்றது என்பதும் அது பிரான்சு நாட்டிலே நடாத்தும் போது மூன்று தசாப்தங்களாக தாயக விடுதலைக்காக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுடன் தன்னை இணைத்துப் பணியாற்றி இன்று சாவடைந்த தாயகச்செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களையும், ஜேர்மனிநாட்டில் தமிழ்க் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு அதற்காக தன்னை அர்ப்பணித்து ,தமிழர்கல்விமேம்பட்டுப்பேரவையுடன் இணைந்து பணியாற்றிய முனைவர் கமலநாதன்  அவர்களின் இழப்பிற்கு மத்தியில்தான் இந்தத்தேர்வை நாம் செய்கின்ற நிலையில் இவைகள் எல்லாமே அவர்கள் கண்ட கனவுகளும், உழைப்பின் அறுவடைதான் என்றதுடன்.  இந்தத்தேர்வின் பெறுமதி பற்றியும் இதில் வெற்றிபெறுபவர்கள் அடுத்த தலைமுறையை கலைரீதியாக வளர்க்கின்ற அங்கீகாரத்தைப்பெற்றுக் கொடுக்கின்றது என்பதையும், இதனைமிகுந்த கரிசனையுடன் தரம்வாய்ந்ததாகவும் இதை நடாத்திக் கொண்டிருக்கும்போது அதை ஒருசிலர் விமர்சனம் செய்வதும் ஒருபக்கம் வேதனையைஏற்படுத்தினால் விமர்சனம் செய்பவர்கள் உரியமுறையில் வெளிப்படைத் தன்மையாக உரியவர்களிடம் உரிய இடத்தில் தொடர்புகொண்டு தமது நேர்மைத் தன்மையை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் அதற்கான நியாயப்பாட்டை தருவதற்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம்  என்றைக்கும் பின் நிற்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்துத் தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் ,பெற்றோர்களையும், பாராட்டியிருந்ததுடன் எதிர்வரும் 31ம் நாள் அனைத்துக் கலை மாணவர்களுக்கும்  அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகத்தால், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்துடன்  இணைந்து பட்டமளிப்பு நிகழ்வும் நடை பெறவுள்ளது என்பதையும் தெரிவித்திருந்தார்.

நன்றியுரையை தமிழ்ச்சோலை தலைமைப்பணியக இளம் செயற்பாட்டாளர் செல்வன் நிரூசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here