தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவிக்கவுள்ள அவரின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக தென்பகுதி ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி படையயடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நாளை 25-ம் திகதியுடன் வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வருகின்ற நிலையில் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் தனது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளார்.
இதற்காக நாளை 24- ம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிய ளவில் நல்லூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முக்கிய உரையை ஆற்றவுள்ள நிலையில்,
நாடு முழுமையும் அவரின் உரை மீது கவனம் செலுத்தத் தலை ப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்பகுதி ஊட கவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி படையயடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை முதலமைச்சரின் நாளைய உரை தொடர்பில் தென் பகுதி ஊடகங்கள் முதன்மைப்படு த்தி செய்தி வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.