நாகர்கோவில் பள்ளி மாணவப் படுகொலையின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!

0
430

யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் பிரதேசத்தில் 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதலில் பலியான 39 மாணவர்களின் 25ஆவது நினைவுதினம் இன்றாகும் .

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக  நினைவுத்தூபி எழுப்பப்பட்டது.

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் சிறீலங்கா விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர்.

விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 25 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here