நாங்கள் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தெரிவித்துள்ளார்.
வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் 430.6 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதிய அரசின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சில தடங்கல்கள் மற்றும் சிறிய பிரச்சினைகள் இருக்கலாம்.அதனை ஊடகங்கள் ஊதி பெரிய பிரச்சினையாகக் காண்பிக்கக்கூடாது.
தமிழர்களுக்கு செய்யவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது . அதற்காகவே தான் புதிய அரசு முன்வந்துள்ளது.நானும் தமிழன் தான் எனக்கும் தமிழர்களுக்கு செய்ய வேண்டிய உரித்துள்ளது.
‘ ‘நாங்கள் கூறியது போல, 1000 ஏக்கர் காணியையும் விடுவிப்போம். தற்போது 400 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம். அடுத்து படிப்படியாக மிகுதி நிலங்களை விடுவித்து ஏப்ரல் மாத இறுதிக்குள் 600 ஏக்கர் காணியையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.