வரலாற்று சந்திப்பு: ட்ரம்ப் – கிம் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
543

சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது, ஒப்பந்தங்கள் சிலவற்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னும் கையெழுத்திட்டுள்ளனர்.

உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், திட்டமிட்ட படி இன்று காலை சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது.

இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதற்தடவையாகும்.

இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்களைக் கைவிடல், பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே புதிய உறவை ஏற்படுத்தவும் கொரிய தீபகற்பத்தில் நிலையான, அமைதியான ஆட்சியை நிலைநாட்டவும் இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே விரிவான, ஆழமான கருத்து பரிமாற்றங்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

உச்சி மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களை வெளியிடப்பட்டுள்ளன.

  • அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.
  • கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 இல் ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.
  • அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here