ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் உடல்நலக் குறைவால் பிரான்சில் நேற்று காலமானார்!

0
186

aravindan-7089ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் உடல்நலக் குறைவால் பிரான்சில் நேற்று காலமானார். கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். கி.பி. அரவிந்தனின் இயக்கப் பெயர் சுந்தர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலாக சயனைட் குப்பி கடித்து உயிரிழந்த சிவகுமாரனுடன் இணைந்து செயல்பட்டவர்.

1953ம் ஆண்டு நெடுந்தீவில் பிறந்த இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். நெடுந்தீவு மற்றும் மட்டக்களப்பில் கல்வி கற்றவர். 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியல் சாசனத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூவரில் கி.பி.அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் பாலகுமாரன் தலைமையிலான ஈரோஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். 1990ஆம் ஆண்டுகளில் பிரான்சில் குடியேறினார்.

அங்கிருந்து பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றினார். ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார் அரவிந்தன். 2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் புதினம் இணைய தளம் நிறுத்தப்பட்ட நிலையில் புதினப்பலகை என்ற செய்தி இணையதளத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்து அதன் ஆசிரியராக செயல்பட்டவர்.

பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ளார் கவிஞர் கி.பி அரவிந்தன். அப்பால்தமிழ் என்ற இணைய இதழையும் நடத்திய அரவிந்தன். கடந்த 5 ஆண்டுகாலம் புற்றுநோயுடன் போராடிய அவர் பிரான்சில் உள்ள மருத்துவமனையில் நேற்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here