மைத்திரியின் முடிவில் திருப்தியில்லை சர்வதேச விசாரணையே அவசியம்: சந்திப்பின் பின் உறவுகள் விரக்தி!

0
319

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் விட யத்தில் இனியும் இலங்கை அரசை நம்பப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்த காணாமல் போனவர்களுடைய உறவுகள், இந்த விடயத்தில் சர்வதேசம் உடனடியாக தலையிட்டு நீதியை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மைத்திரியுடனான சந்திப்பின் பின் மீண்டும் முற்றுமுழுதாக தாம் ஏமாற்றம் அடைந்து விரக்தியின் உச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள் ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு கிழக்கில் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலக த்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே உறவுகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர் கள் சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவிக் கையில்,
எமது கோரிக்கைகள் தொடர்பாக அவ ர்கள் வேண்டாவெறுப்பாகவே பேசுகிறார்கள். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந் தது? இருக்கிறார்களா? இல்லையா? என்பது தொடர்பில் அவர்கள் பதிலளிப்பதை நோக்க மாக கொண்டு எம்மிடம் பேச்சுவார்த்தை நட த்தவில்லை, மாறாக எமக்கான நட்டஈட்டை வழங்குவதிலேயே குறியாக உள்ளார்கள்.

நாங்கள் எமது பிள்ளைகளை நேரடியா கவே ஒப்படைத்திருந்தோம். இராணுவத் தின் கையில் ஒப்படைத்தவர்களைத்தான் கேட்கிறோம். ஆனால் அதற்கு ஜனாதிபதி பொருத்தமான பதிலை எமக்கு அளிக்கவில்லை.

அதாவது சிங்களவர்களும் முஸ்லிம்க ளும் கடத்தப்பட்டுள்ளார்கள். எனவே காணா மல் போனோர் அலுவலகத்தின் ஊடாக மேற் கொள்ளப்படும்  விசாரணையே அனைவரு க்கும் பொருத்தமானது. அதை நாம் மேற் கொள்வோம் என தெரிவிக்கிறார்.
ஆனால் நாம் கையில் கொடுத்த பிள்ளை களை தான் கேட்கிறோம். கடத்தியவர்களை கேட்கவில்லை. சிங்களவர்களும் முஸ்லிம் களும் காணாமல் போன விதம் வேறு. எமது பிரச்சினை வேறு என தெரிவித்திருந்தோம்.

காணாமல் போனோர் அலுவலகத்தை நாம் நிராகரிக்கிறோம். அதில் எமக்கு நம்பி க்கை இல்லை எனவும் நேரடியாகவே ஜனா திபதியிடம் தெரிவித்துள்ளோம். ஏற்கெனவே இருந்த விசாரணைக்குழுக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அதேபோன்று தான் இந்த குழுவும் ஒரு ஏமாற்று நாடகம்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மற்றும் முன்னாள் இராணுவத்தளபதிகள் தற்போது இலங்கையில் தான் உள்ளார்கள். அவர்களை கூட்டில் ஏற்றி விசாரணை செய் வதற்கு ஏன் பின்னிற்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளோம்.
ஆனால் இது தொடர்பில் ஆக்கபூர்வமான பதிலை எமக்கு தருவதாக இல்லை. இழப் பீட்டை தரும் முயற்சியில் தான் ஈடுபட்டுள் ளார்கள். எமது உறவுகளை மீட்கும் எண் ணம் யாருக்கும் இல்லை.

எமது அரசியல் தலைவர்களும் எம்மை கைவிட்டு விட்டார்கள். தேர்தலுக்கு எமது வீடுகளுக்கு அவர்கள் வரக் கூடாது. விரக்தி யின் உச்சத்தில் நாம் உள்ளோம்.
எமது உயிரின் வேதனை ஏன் அவ ர்களுக்கு புரியவில்லை என்று எமக்கு தெரிய வில்லை. எமக்கு என்று ஒரு அரசு இலங் கை யில் இல்லை. சர்வதேசமே எமது பிரச்சினை யில் தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதுவரை காணாமல்போன தமது உறவுகள் தொடர்பில் தொடர்ந்தும் போராட்ட ங்களை முன்னெடுக்க போவதாக காணா மல் போனோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here