தமிழ் மக்களுக்கான தீர்வு பின்னோக்கியே நகர்வு;சுரேஷ் பிரேமச் சந்திரன்!

0
420

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக திலீபன் போராட ஆரம்பித்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலை யிலும் இன்னமும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற பசி, தமிழ் மக்களினுடைய உரிமைகள் என்ற விடயம் போன்றன பின் நோக்கி நகர்த்தப்பட்டுள்ள
னவே தவிர அவற்றில் எந்தவித முன்னேற்ற ங்களும் ஏற்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக நல்லூ ரில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபி யில் இடம்பெற்றிருந்தது. இவ் அஞ்சலி நிக ழ்வைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற நிக ழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்,

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை க்கான தீர்வு என்ற பசி தமிழ் மக்களினு டைய உரிமைகள் என்ற விடயம் போன்றன 30 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவை பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனவே தவிர அவற்றில் எந்தவித முன்னேற்றங்க ளும் ஏற்படவில்லை.

இந்த அரசாங்கம் தமிழ்மக்களுடைய உரிமை தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த உறுதி மொழிகள் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு கொடுத்த உறுதிமொழி கள் இவை யாவுமே காற்றில் பறக்கவிடப் பட்டு இன்று இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சி னைக்குத் தீர்வான அதிகாரப் பகிர்வு இந்த அறிக்கையில் உண்டு எனக் கூறப்பட்டாலும் ஒற்றையாட்சி என்பதற்குள் வடக்கு வேறு கிழக்கு வேறாக பிரிக்கப்பட்ட ஒரு விடயத் திற்குள் தான் இந்த அதிகாரப் பகிர்வு என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றார்கள். அதே போன்று ஒன்றையாட்சி என்பதிலும் தீவிர மாக இருக்கின்றார்கள். பௌத்தத்திற்கு முன் னுரிமை அளிப்பதிலும் தீவிரமாக இருக்கின்றார்கள்.
13+ திருத்தச் சட்டம் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது.இந்த 13+திருத்தச் சட்டம் என்பது கூட ஒற்றையாட்சிக்குள் இரண்டாவது சபை ஒன்றை அதாவது பாராளுமன்றத்தில் இரண்டாம் சபையாகசெனற் சபையைக் கொண்டு வரு வதன் ஊடாக இந்த 13ஆவது திருத்தத்தை மேலதிக திருத்தியுள்ளோம் எனக் கூறுகின் றார்கள். ஆனால் இச் செனற்சபையில் 45 பேரில் 5 அல்லது 6 பேர்தான் தமிழர்களாக இருப்பார்கள்.

மீதி அனைவரும் சிங்களவ ர்களாக இருப்பார்கள். அவர்கள் அனை வரும் மாகாண சபை உறுப்பினர்களில் இரு ந்து தெரிவு செய்யப்படுவார்கள். 10 பேரை பாராளுமன்றம் தெரிவு செய்வதாக இருக்கும். அவ்வாறு காணப்படின் இவ் செனற் சபையி னாலும் கூட தமிழ் மக்களுடைய பிரச்சினை க்கு எந்தவிதத் தீர்வும் கிடைக்கப்போவ தில்லை. இது மகிந்த ராஜபகஷவின் ஆட்சிக் காலத்தில் எம்மால் நிராகரிக்கப்பட்டது. இவ் வாறான நிலையில் இன்றைய தலைமை கள் ஏன் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது தான் புரியாத புதிராகவுள்ளது.

ஆகவே நாம் அனைவரும் ஒன்றுசேர் ந்து தமிழ் மக்களினுடைய உரிமைகளை வென்றெடுக்கவேண்டும். அவர்கள் இம் மண்ணில் சுதந்திரமாக மரியாதையாக வாழக்கூடிய ஓர் சூழல் ஏற்படுத் தப்படவேண் டும். அத்தகைய அதிகாரங்களைக் கொண்ட ஒரு சக்தியாக தமிழ் மக்கள் இருக்கின்ற போது தான் அவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here