நல்லூர் கந்தன் பெருவிழா நாளை ஆரம்பம்: கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று!

0
170

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா நாளை (28.07.2017) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்து செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அடைந்தது.

செங்குந்தர் பரம்பரையைச் சேர்ந்தோர் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here