பிரான்சில் 12பிராந்தியங்களுக்கு செம்மஞ்சள் காலநிலை எச்சரிக்கை!

0
372


வடகிழக்கு l’Île-de-France இருந்து Limoges வரையான 12 பிராந்தியங்களுக்கு பிரான்சு வானிலை மையத்தினால் செம்மஞ்சள் காலநிலை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை 10.07.2017 திங்கள்கிழமை மாலை 16.00 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பனிக்கற்கள் விழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணம் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. மற்றும் பொதுமக்கள் இலத்திரனியல் சாதனங்களை கவனமாகப் பாவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here