
கொட்டும் மழையிலும் இன்று மயிலிட்டி மக்களின் மண் மீட்பு போராட்டம் தொடர்கின்றது.

சொந்த மண்ணில் அடிமைகளாகவும், அகதிகளாகவும் வாழும் அவலம் எமது இனத்திற்கு இன்னும் தொடர்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும், இயற்கை சீற்றமே குறுக்கிட்டாலும் எமது நிலத்திற்கான உரிமைப் போராட்டம் ஓயாது.

எம் சொந்த நிலத்தில் நாம் நிம்மதியாக வாழும் வரை எமது குரல் ஓங்கி ஒலிக்கும். என் போராட்ட களத்தில் இருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.





