வித்தியாவின் உயிர் 3 காரணங்களால் பிரிந்தது; சட்டவைத்திய அதிகாரி நேற்று சாட்சியம்

0
787

புங்குடுதீவு மாணவி வித்தியா குறுகிய நேரத்துக்குள் பலரால் கூட்டு வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டுள் ளார் என்பதுடன்  மூன்று காரணங் களால் அவரது உயிர் பிரிந்துள்ளது  என வித்தியாவின் உடலினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி யு.மயூரன் நீதாய விளக்க நீதிமன்றில் நேற்றையதினம் சாட்சியமளித்துள்ளார்.

அதாவது  கழுத்தில் போடப்பட்ட சுருக்கு, வாய்க்குள் திணிக்கப்பட்ட உள்ளாடையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் மற்றும் தலையின் பிடரிப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசி வின் காரணமாகவே வித்தியா உயிரிழந்துள்ளார் என தனது சாட்சியத்தில் விளக்கமளித்துள்ளார்.

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் நீதாய விளக்க விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் 6 ஆவது நாளாக மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் போது வழக்கின் சாட்சியாக, வித்தியாவின் உடலினை பிரேத பரி சோதனைக்கு உட்படுத்திய யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி யு. மயூரன் அழைக்கப்பட்டார்.

பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணத்தின் பிரதான விசாரணையில் கேட்கப்பட்ட கேள் விகளுக்கு அவர் தனது சாட்சியத்தின் போது விளக்கமளிக்கையில்,

சிவலோகநாதன் வித்தியா என்னும் மாண வியின் கொலை வழக்கில் பிரேத பரிசோ தனை தொடர்பாக சாட்சியமளிக்க வந்துள் ளேன். வித்தியாவின் உடலினை பிரேத பரி சோதனை செய்யுமாறு  ஊர்காவற்றுறை நீத வான் நீதிமன்ற நீதிபதியாக அக்காலத்தில் இருந்த நீதவான் லெலின்குமார் உத்தர விட் டார்.

அதற்கமைய 2015ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 14 ஆம் திகதி பிற்பகல் 5 மணியள வில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைத்து பிரேத பரி சோதனை மேற்கொண்டேன்.
பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சட லம் வித்தியாவினுடையது என்பதை  2 பேர் அடையாளப்படுத்தியிருந்தார்கள். உரும்பிராய் பகுதியில் வசிக்கும் வித்தியாவின் சித்தியான சறோயினி மற்றும் புங்குடுதீவில் வசிக்கும் வித்தியாவின் சகோதரனான கார்த்தி என்ப ரும் வித்தியாவின் உடலினை அடையாளப் படுத்தியிருந்தார்கள்.

2015.05.14 அன்று வித்தியாவின் சட லம் மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்றிருந்தேன்.  நான் சென்றதற்கு முதல்நாள் இரவும், காலை யும் மழை பெய்து ஓய்ந்திருந்தது.  வித்தியா வின் சடலம் இருந்த இடத்திற்குச் சென்ற போது, ஊர்காவற்றுறை பொலிஸார், தடயவி யல் பொலிஸார் மற்றும் பல பொது மக்கள் கூடியிருந்தார்கள்.

வித்தியாவின் உடலிற்கு அருகில் யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந் தது. எச்சரிக்கை லேபிள் கட்டப்பட்டு பொலி ஸாரினால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

வித்தியாவின் உடல் மல்லாக்காக இருந் தது. கண் மூடப்பட்டிருந்தது. பெண் உறுப்பு மட்டும் ஆடையால் மறைக்கப்பட்டிருந்தது. இரு கைகளும் தலைக்கு பின்புறமாக வைத்து கட்டப்பட்டிருந்தது. கையில் இரு பெருவிரலும் ஒன்றாக சேர்க்கப்பட்டு பச்சை நிற ரிபனால் கட்டப்பட்டிருந்தது.

இரு கால்களும் 180 பாகைக்கு விரிக்கப் பட்டு மரத்துடன் கட்டப்பட்டிருந்தது. வலது கால் மார்புக் கச்சையால் கட்டப்பட்டிருந்தது. இடது கால் சீருடையின் இடுப்பு பட்டியால் கட்ட ப்பட்டு இழுத்து அலரி மரத்தில் கட்டப்பட்டிரு ந்தது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையை  சட்ட வைத்திய அதிகாரி சைகைமூலம் செய்து காண்பித்தார்.

வித்தியாவின் தலை  இடப்பக்கம் திரும் பியவாறு காணப்பட்டது.  காது, மூக்கு வழி யாக இரத்தம் போன்ற திரவம் வழிந்து காண ப்பட்டது.

வாய்ப்பகுதி  பகுதியளவில் திறந்து காண ப்பட்டது. வாய்க்குள் ஆடை திணிக்கப்பட்டிரு ந்தது. நான் முதலில் வாயை பார்க்கும் போது ஆடை அதற்குள் இருந்ததை அவதானிக்க வில்லை. பின்னர் வித்தியா அணிந்திருந்த ஆடைகளை கணக்கெடுத்தபோதுதான் உற்று நோக்கினேன்.
அப்போதுதான் ஆடை வாய்க்குள் இருப் பதை கண்டேன். முதலில் நான் அதை நாக்கு வெளியில் வந்துள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேறு காயங்கள் வித்தியாவின் உடலில் காணப்பட்டதா என பிரதி மன்றாதிபதி கேள்வி யெழுப்பினார். ஆம். என பதிலளித்த அவர், உடலின் பின்புறத்தில் உராய்வுக் காயம் காணப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் அவர் விளக்கமளிக்கையில், வித்தி யாவின் உடலின் வலப்புறம் கிழிந்த சீருடை காணப்பட்டது. உடலின் பல இடங்களிலும் குருதி என்று கூறக்கூடிய படிவம் ஒன்று காண ப்பட்டது. அதிலும் சான்றுகள் சேகரிக்கப்பட்டது,

இரண்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ஜோனிப் பகுதியில் இருந்தும் வித்தியாவின் மார்புப் பகுதியில் இருந்தும் தலை முடி இர ண்டினையும் சான்றுப் பொருட்களாக சேக ரித்தேன்.
வித்தியாவின் கழுத்து பாடசாலை கழு த்தப்பட்டியால் (ரைய்) வழுக்கும் நிலையில் சுருக்கிடப்பட்டு கழுத்தில் கட்டப்பட்டிருந்தது. கழுத்து இடப்பக்கம் மேல் பக்கமாக இறுக்க ப்பட்டிருந்தது. கழுத்தில் கட்டப்பட்ட கழுத்துப் பட்டியின் மறு முனை அருகில் இருந்த அலரி மரத்தில் 2 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந் தது.

வித்தியாவின் உடலில்  மொத்தமாக 8 காய ங்கள் காணப்பட்டிருந்தது. ஒன்று தலைக்கு பின்புறமாக தலையுடன் எலும்பு கோர்க்கும் பிடரிப் பகுதியில் சற்று வலப்பக்கமாக 16ஓ8 சென்றிமீற்றர் காயம் காணப்பட்டது. பின்புறப் பகுதி குருதி நிரம்பிக் காணப்பட்டது.

இச்சாட்சியப் பதிவின் போது மன்றின் அனு மதியுடன் நீதிமன்ற அலுவலகப் பணியாளர் ஒருவர் அழைக்கப்பட்டு, அவரை வித்தியா வின் உடல் போல் காண்பித்து காயங்கள் எங் கிருந்தது என்பதை தொட்டுக் காட்டி அடை யாளப்படுத்தினார். உடலின் உள்ளே எலும்பு முறிவு எதுவும் இல்லை. ஆனால் மண்டை ஓடு உள்ளே வீக்கம் ஏற்பட்டிருந்தது. மூளை யில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டதால் மூளையும் வீங்கிக் காணப்பட்டது.

இக்காயமானது, தாக்கப்பட்டபோது அல் லது தலை வன்மையான பகுதியில் அடிக்கப் படும் போது ஏற்படும். குறிப்பாக சீமெந்து தரை மரம் போன்ற வன்மையான பகுதிகளில் அடிப்பதால் ஏற்படும். ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கம் ஏற்படும் போது ஏற்பட்டிரு க்கும்.
இரண்டாவது காயம் தலையில் மேற்பகுதி குறிப்பாக உச்சிப் பகுதியில் காணப்பட்டது. அதில் 7இற்கும் மேற்பட்ட காயங்கள் காண ப்பட்டது. அக் காயங்கள் ஒவ்வொன்றும் 12ஓ10 சென்றிமீற்றர் அளவுடையவை.
இக் காயங்கள் தட்டையான விசையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது கூந்தலை பலமாக இழுத்ததினால் ஏற்பட்டிருக்கலாம்.

மூன்றாவது காயம் வலது கண் பகுதியில் காணப்பட்டது. அது கண்டல் வகையான காயம். 3ஓ3 சென்றி மீற்றர் அளவான காயம் அது.

அக்காயம் மொட்டையான ஏதேனும் ஒன் றினால் ஏற்பட்டிருக்கும் அல்லது தாக்கப்படுவ தால் ஏற்பட்டிருக்கும். இல்லாவிட்டால் அழு த்திப் பிடிப்பதனால் ஏற்பட்டிருக்கும்.
நான்காவது காயம் வித்தியாவின் மேல் உதட்டில் காணப்பட்டது. சிறிய அளவிலான கண்டல் காயம் அது. இக் காயமும் இறுக்க மாக அழுத்துவதால் ஏற்பட்டிருக்கும்.

ஜந்தாவது காயம் கழுத்தினை சுற்றிக் காணப்பட்டது. அது உராய்வினால் வந்த காயம். 35ஓ1 சென்றிமீற்றர் அளவான காயம். வித்தியாவின் கழுத்தில் கட்டப்பட்ட கழுத்துப் பட்டியால் ஏற்பட்ட கண்டல் காயமாக அது இருக்கும். ஆனால் எலும்பு முறிவு ஏற்பட வில்லை. இந்த காயம் சுவாசத்திற்கு தடை யாக அமைந்திருக்கும்  வெளியில் அழுத்தி யதால் சுவாச குழாயில் சுருக்கம் ஏற்பட்டு, சுவாசம் தடைப்பட்டிருக்கும்.

6ஆவது காயம்  கண்டல் வகையான காயமாக இருந்தது. வித்தியாவின் தோலை வெட்டிப் பார்க்கும் போதுதான் அது வலப் பக்க இடுப்பிற்கு சற்று மேலே காணப்பட்டது. அது பெரிய கண்டல் காயமாக இருந்தது. 18ஓ12 சென்ரி மீற்றர் அளவு பெரிய காயம் அது.
அந்த காயம் வித்தியாவின் உடலின் மேல் இருந்து அழுத்தத்தினை பிரயோகித்த தால் ஏற்பட்டிருக்கும்.
ஏழாவது காயம் உராய்வு காயம். 12ஓ7 சென்றி மீற்றர் அளவு காயமாக இருந்தது. வித்தியாவின் பின்புறம் இரு விட்டத்திலும் காணப்பட்டது.

8ஆவது காயம் காலில் இருந்தது. அக் காயத்தில் புண் ஒன்றில் முள்ளும் இருந்தது. அது பச்சை நிறமான முள்ளு.
மேலும் வித்தியாவின் கண் மடல் உள்ளே இரத்தக் கசிவு காணப்பட்டது. கண்ணுக்கு வெளியே ஒட்டக் கூடிய திரவப் பதார்த்தமும் காணப்பட்டது. இது மூச்சுத் திணறலின் போது இவ்வாறான இரத்தக் கசிவு ஏற்படும்.

வித்தியாவின் வாய்க்கு உள்ளே றோஸ் கலர் (பிங்) ஆடை ஒன்று வாய்க்குள் திணி க்கப்பட்டு காணப்பட்டது. பற்கள் அனைத்தும் இருந்தது. மரணத்தினால் ஏற்படும் விறை ப்பு முடிந்து உடல் அழுகும் நிலைக்குச் சென்றி ருந்தது. மரணம் ஏற்பட்டு  18 தொடக்கம் 32 மணித்தியாலங்களில் உடல் அழுகல் நிலை க்கு சென்றுவிடும். 24 மணித்தியாயலங்கள் சென்றதும் முட்டைகளில் இருந்து புழுக்கள் குடம்பி நிலையினை அடைந்து செயற்பட ஆரம்பித்துவிடும்.

பெண்ணுறுப்பில் பல காயங்கள் காண ப்பட்டது.
ஒரு முறை ஏற்படுத்தப்பட்ட உடலுறவுக்கு அப்பால் பல முறை பலரால் உடலுறவு கொள் ளும் போது ஏற்படும் என்பதை தெளிவாக கூற முடியும்.
மேலும் பலரால் ஒன்றுக்கு மேற்பட்ட தட வைகள் சிறிய காலப்பகுதிக்குள் அல்லது குறு கிய நேரத்திற்கு அதிக தடவை  பலவந்தமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும் போதும்  ஏற்பட்டிருக்கும்.

வித்தியாவின் நெஞ்சறை, சுவாசப்பை வீங்கிக் காணப்பட்டது, குருதிக் குழாயில் குருதி தேங்கியும் விரிவடைந்தும் காணப்பட்டது. இவ்வாறான மாற்றம் மூச்சுத் திணறலின் போது ஏற்படும்.
வித்தியாவின் வயிற்றுக்குள் 100 மில்லி லீற்றர் மஞ்சள் நிறத் திரவம் காணப்பட்டது. அது தேநீரை ஒத்ததாக காணப்பட்டது. அதில் மதுசாரமோ, நஞ்சோ கலக்கப்படவில்லை.
வித்தியாவின் மரணத்திற்கு 3 காரண ங்கள் உள்ளன. ஒன்று தலையில் ஏற்பட்ட காயமாகும். மற்றயது கழுத்தில் ஏற்பட்ட நெரிவு ஆகும் மற்றும் வாய்க்குள் திணிக்கப்பட்ட ஆடையாகும்.
தலையில் ஏற்பட்ட காயம்  உடனடியாக மரணத்தை ஏற்படுத்தாது. முதலில் வீக்கம் ஏற்படும். சிறிது நேரத்தில் மரணம் ஏற்படும். மூளையின் தாக்கத்தின் அளவும் இரத்த பெருக்கின் அளவும் மரணத்தின் நேரத்தை தீர்மானிக்கும்.

கழுத்தில் போடப்பட்ட சுருக்கு  சில நிமிட ங்களில் உயிரை பிரிக்கும். வாய்க்குள் அடை ந்த துணி கொலை செய்வதற்காக துணி அடையாவிட்டாலும்,  சத்தம் போடுவதை தடு ப்பதற்காக அடைத்திருக்கலாம்.
ஆனாலும் வாயில் உமிழ்நீர் சுரப்பதால் ஏற்படும் ஈரலிப்பு துணியை பாரப்படுத்தி அதனை தொண்டைக்குள் இழுக்கும். கைகள் கால்கள் கட்டப்பட்டிருந்தால் துணியினை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். அது சுவாசத்தை தடுத்திருக்கும். வாய்க்குள் துணி இருக்கும் போது மூக்கினால் சுவாசிக்க லாம். ஆனால் தொண்டைக்குள் துணி இரு ந்தால் சுவாசிக்க முடியாது. மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படும்.
கழுத்தில் சுருக்கிடப்பட்டு தொண்டைக் குள் துணி அடைந்தால் எவ்வளவு நேரத்தில் மரணம் சம்பவிக்கும் என மன்றால் கேள்வி எழுப்பப்பட்டது.

நில நிமிடங்களில் மரணம் ஏற்படும் என பதிலளித்தார்
மேலும் வித்தியாவின் சடலம் காணப்ப ட்ட இடத்தில் தடயங்கள் அழிவடைந்தி ருந்தது.
மழை பெய்ததாலும் எறும்பு மற்றும் புழுக்களின் நடமாட்டத்தினாலும் சில தட யங்கள் அழிவடைந்திருக்கும்.
விந்தில் குளுக்கோஸ் அதிகளவில் இரு க்கும். அது எறும்பினை கவருவதாக இருக்கும்.
வித்தியாவின் சடலம் இருந்த இடத்தில் வைத்தா அவர் வன்புணர்வுக்கு உட்படுத்த ப்பட்டார் என கேள்வி எழுப்பப்பட்ட போது,

இல்லை. என பதிலளித்த அவர்  அவ்வாறு நடந்ததற்கான தடயங்கள் அங்கு இல்லை. வித்தியாவின் சடலம் காணப்பட்ட இடம் அலரி மற்றும் பூவரசு போன்ற மரங்களில் இருந்து விழுந்த இல்லைகளால் பரவி மெத்தை போன்று காணப்பட்டது.

வித்தியாவின் சடலம் இருந்த இடத்திலும் சருகுகள் அசையாமல் அப்படியே இருந்தது. குறிப்பாக 4 அடி தூரத்திற்கு எந்த அசைவுக ளும் இல்லை. இதனால் வித்தியா அங்கு வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட வில்லை என்று சாட்சியமளித்தார்.
இச் சாட்சியத்தினை தொடர்ந்து எதிரி தர ப்பு சட்டத்தரணிகளால் அவருடைய சாட்சி யம் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சாட்சி மன்றினால் விடுவிக்கப்ப ட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here