தமிழ் மக்­களின் ஈடேற்­றத்­திற்கு உங்­க­ளுடன் கைகோர்த்து நிற்பேன் !

0
180

தமிழ் மக்­களின் எதிர்­காலம் எங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் என்­பதை ஊர­றிய உல­க­றியச் செய்த உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் எனது மன­மார்ந்த நன்­றிகள் உரித்­தா­கட்டும். நீதி­யான தமிழ்த் தேசியக் கொள்­கைக்­காக என்­னுடன் நின்ற அனை­வ­ருக்கும் நான் செய்­யக்­கூ­டிய கைமாறு என்­ன­வென்றால் தமிழ் மக்கள் நலன்­க­ருதி அவர்­களின் ஈடேற்­றத்­திற்­காக உங்­க­ளுடன் கைகோர்த்து நிற்­பதே என்று நம்­பு­கின்றேன் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.
வட­மா­காண சபையில் ஏற்­பட்ட சர்ச்­சை­யின்­போது தனக்கு ஆத­ர­வாக நின்ற மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்து முத­ல­மைச்சர் நேற்று இந்த அறிக்­கை­யினை வெ ளியிட்­டுள்ளார்.
அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
என­தி­னிய தமிழ் நெஞ்­சங்­களே, அண்­மையில் நடந்­தவை கன­வாகக் கடந்­து­விட்­டாலும், அவற்­றின்­தாற்­ப­ரி­யங்கள் சில மேலோங்கி நிற்­கின்­றன.
முத­லா­வ­தாக என் வாழ்க்­கைக்கு ஒரு அர்த்­தத்தை அளித்­துள்­ளீர்கள். “கொழும்பில் இருந்­து­வந்த இவ­ருக்கு மக்கள் பலம் இல்­லை”­என்­ற­வர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்­கின்­றார்கள். உங்கள் உணர்­வு­களின் வேகம்­கண்டு மிரண்­டுள்­ளார்கள். என்னைக் காண­வந்­த­வர்கள் சேர்க்­கப்­பட்­ட­வர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்­த­வர்கள் என்­பதை உல­க­றிச்­செய்­துள்­ளீர்கள்.
இரண்­டா­வ­தாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை ஒட்டி நான் நடந்­து­கொண்டு வரும்­விதம், எடுத்து வந்த தீர்­மா­னங்கள் ஆகி­யன சரியோ பிழையோ என்று சல­ன­முற்­றி­ருந்த வேளை­யி­லேதான் “நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்­க­ளு­டன்­தான்“­என்று நம்­பிக்கை ஒளி ஊட்­டி­யுள்­ளீர்கள்.
மூன்­றா­வ­தாக மக்கள் பலம் என்­ப­தென்ன என்ற கேள்­விக்கு விடையை உல­க­றி­யச்­செய்து விட்­டீர்கள். நான்­கா­வ­தாக நந்­த­வ­னத்து ஆண்­டி­க­ளுக்கு நய­மான பாடங்கள் புகட்­டி­விட்­டீர்கள். போட்­டு­டைத்­த­வர்­களை அடை­யா­ளம்­காண அவர்­க­ளுக்குச் சந்­தர்ப்­பம்­வ­ழங்­கி­யுள்­ளீர்கள்.
ஐந்­தா­வ­தாக தமிழர் அர­சியல் பிரச்­சி­னை­களை ‘இந்தா அந்தா’ தீர்க்க வரு­கின்றோம் என்­ற­வர்­க­ளுக்கு அவர்­களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்­ப­டை­யி­லான தீர்­வுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என்ற செய்­தியை ஓங்கி உரைத்­துள்­ளீர்கள். ஆறா­வ­தாக ஊழ­லுக்கு எம்­மக்கள் எதி­ரா­ன­வர்கள் என்ற செய்­தியை உல­க­றி­யச்­செய்து விட்­டீர்கள்.
இவ்­வாறு பல செய்­தி­களை நீங்கள் உங்கள் எழுச்­சியால் எடுத்­தி­யம்பி விட்­டீர்கள். என்­னையும் உங்­களுள் ஒரு­வ­னாக ஏற்­றுள்­ளீர்கள். தமிழ் மக்­களின் எதிர்­காலம் எங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் என்­பதை ஊர­றிய உல­க­றி­யச்­செய்த உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் எனது மன­மார்ந்த நன்­றிகள் உரித்­தா­கட்டும்.
முக்­கி­ய­மாக இளை­ஞர்­களின் எழுச்சி என்னைப் பர­வசம் கொள்­ளச்­செய்­தது. எம்­ம­வர்­களின் அன்பு நெஞ்­சங்­களின் அர­வ­ணைப்பு மன­துக்கு இத­மாய்­அ­மைந்­தது. அவர்­களின் கரி­ச­னையும் ஊக்­கு­விப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின. நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன்கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன்கை கோர்த்துநிற்பதே என்று நம்புகின்றேன். உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள்கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here