காணியை விடுவிக்குமாறு கோரி சிறீலங்கா இரா­ணு­வத் தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் !

0
158


புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­ல­கத்­துக்கு முன்­னால் சிறீலங்கா இரா­ணு­வம் சுவீ­க­ரித்­துள்ள காணியை விடு­விக்­கக் கோரி சிறீலங்கா இரா­ணு­வத் தள­ப­திக்கு நினை­வூட்­டல் கடி­தம் அனுப்­ப­வுள்­ள­தாக முல்­லைத்­தீவு மாவட்­டச் செய லாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணியை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்துத் தெரிவிக்கையில்,
காணிகள் மீண்டும் எமக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த பெப்ரவரரி மாதம் 3ஆம் திகதி முதல் தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஒரு மாத கால போராட்டத்துக்குப் பின்னர் 20 குடும்பங்களுக்குச் சொந்தமான 7.75 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.
29 குடும்பங்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை மூன்று மாத காலத்தில் விடுவிப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்தனர். அதனை மாவட்டச் செயலாளரும், பிரதேச செயலாளரும் எமக்குத் தெரியப்படுத்தினார்கள்.
சிறீலங்கா இராணுவத்தின் தளபாடங்களை அகற்றுவதற்கு சிறு காலம் தேவை என கருதி நாங்களும் சம்மதித்தோம். அத்துடன் இராணுவத்தின் மீதும், அரச அதிகாரிகள் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்து 3 மாதம் பொறுமையாக இருந்தோம். ஜூன் மாதம் 4ஆம் திகதியுடன் மூன்று மாதம் நிறைவடைந்துள்ளது.
இன்றும் நாங்கள் எங்கள் காணிகளுக்குள் செல்லாது அகதியாக வடகை வீடுகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பிரதேச செயலாளருக்கு இது தொடர்பில் கடிதம் ஊடாகத் தெரிவித்துள்ளோம். விரைவாக எங்கள் காணிகள் விடுவிக்கப்படவேண்டும்-என்றனர்.
‘காணிகள் விடுவிக்கப்படாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். பிரதேச செயலர் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது” என முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here