படை முகாம்கள் அகற்றப்படமாட்டாது ; படை எண்ணிக்கையை குறைப்பதற்குத் தயாரில்லை: ருவான் விஜயவர்த்தன!

0
135

ruwan-720x480வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பாதுகாப்பு  அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கூறினார். இதேவேளை, படை எண்ணிக்கையை குறைப்பதற்குத் தயாரில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று ஆரம்பித்த அமைச்சர், முதலாவதாக நேற்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமைய கத்துக்குச் சென்றார்.

மக்கள் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் உரிய முறையில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று பாதுகாப்புப் படையினரைக் குறைக்க எந்த விதத்திலும் தயார் இல்லை என்றரர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here