பிரான்சில் சேர்ஜி பகுதியில் மே 18 கவனயீர்ப்பு நிகழ்வு!

0
1043

பிரான்சில் எதிர்வரும் 18ம் நாள் நடைபெறவுள்ள தமிழின அழிப்பின் உச்சநாளான மே 18 நாள் 8 வது ஆண்டு நினைவுகூரல் மாபெரும் பேரணியாக இடம்பெறவுள்ளது. உரிமைக்காகவும், நீதிக்காகவும் உயிர் நீத்த நாட்டின் உயர்வானவர்களுக்கும் மரியாதை செலுத்தி பிரெஞ்சு தேசத்தவர்களாலும், ஏனைய வெளியாட்டு மக்களாலும் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி வரும் பிரான்சு நாட்டின் முக்கிய முதன்மை இடங்களில் ஒன்றான குடியரசு சுதந்திரச் சிலை உள்ள இடத்தில் தமிழீழ மக்களால் நீதிக்கான ஒன்றுகூடல் இடம் பெறவுள்ளது.

2015 ல் பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களுக்கு வணக்கம் செலுத்தி அக் கொலையை கண்டிக்கும் முகமாகவும் உலகத் தலைவர்கள் பலர் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  தமிழீழ மக்களின்  தமிழின அழிப்பின் உச்ச நாள் மே 18 பேரணியும் ஓன்றுகூடலுக்குமான பரப்புரையும், வணக்க நிகழ்வுகளும், நிழற்படக்கண்காட்சிகளும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளது.

அதன் ஆரம்பகட்டமாக கடந்த 06.05.2017 சனிக்கிழமை பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சேர்ஜி பொந்துவாஸ் தமிழ்ச்சங்கம் தமிழ்ச்சங்க இளையோர்களின் ஏற்பாட்டில் தமிழினப்படுகொலைக்கு உள்ளான தமிழீழ மக்களுக்கான சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கமும் அவ்வூர் மக்களால் செய்யப்பட்டது. மே 18 ம் நாள் வரை தொடர்ந்து பல இடங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here