14 நாட்களுக்குள் பதில் வழங்கா விட்டால் போராட்டம் தொடரும் !

0
145

முல்­லைத்­தீவு, வட்­டு­வாகல் மற்றும் முள்­ளி­வாய்க்கால் கிழக்­குப்­ப­கு­தி­களை உள்­ள­டக்கி 617 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் அமைந்­துள்ள கோத்­த­பாய கடற்­படை முகாமை அகற்­றக்­கோ­ரியும் வட்­டு ­வாகல் மற்றும் நந்­திக்­க­டலில் மக்­களின் மீன்­பிடித் தொழி­லுக்கு இடை­யூ­றாக தடை­களை ஏற்­ப டுத்­தி­யுள்ள கடற்­ப­டை­யி­னரை வில­க­க்கோ­ரியும் நேற்று வட்டுவாகல் பகுதி மக்கள் அடையாள உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளனர்.
மூன்­றுநாள் தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்­தில் ஈடுபட்டுவந்த இந்த மக்கள் நேற்று (21) வெள்ளிகி ­ழமை காலை 9.30 மணி முதல் வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்­கி­ருந்து பேர­ணி­யாக வட்­டு­வாகல் பாலம் ஊடாக முல்­லைத்­தீவு நகரை இவர்கள் சென்­ற­டைந்­தனர்.
வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகனின் வர­வு­செ­ல­வுத்­திட்ட நிதி ஒதுக்­கீட்டில் அமைக்­க­பட்­டுள்ள மகாத்­மா­காந்­தியின் சிலையினை மக்கள் திறந்து வைத்ததுடன் அந்த இடத்­தி ­லேயே அடை­யாள உண்ணா­வி­ரத்­தத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
இந்த ஒருநாள் அடை­யாள உண்­ணா­வி­ர­தத்தில் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வைத் ­தியர் சி.சிவ­மோ­கனும் இணைத்­துக்­கொண்­டி­ருந்தார்.
பின்னர் பிற்பகல் 3.30மணி­ய­ளவில் உண்­ணா­வி­ரதம் இடம்­பெறும் இடத்­துக்கு வரு­கை­தந்த முல்­லைத்­தீவு மாவட்ட மேல­திக அர­சாங்க அதிபர் பிரா­ண­வ­நா­த­னிடம் அர­சாங்க அதி­ப­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் ஒப்­ப­டைப்­ப­தற்­கான மகஜர்களை இந்த மக்கள் கையளித்தனர்.
பதி­னான்கு நாட்­க­ளுக்குள் தமது சொந்த நிலங்­களை விடு­விப்­பது தொடர்பில் அர­சாங்கம் சாத­க ­மான பதிலை தர­வேண்டும் எனவும் அவ்­வாறு பதி­னான்கு நாட்­க­ளுக்கு முடிவு தமக்கு கிடைக்­க ­வில்லை எனில் தமது போராட்டம் தொடர்­போ­ரா­ட்­ட­மாக வெடிக்கும் எனவும் இந்த மக்கள் மேல­திக அர­சாங்க அதி­ப­ரிடம் தெரி­வித்­தனர்.
முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்கால் கிழக்கு பகுதி மற்றும் வட்­டு­வாகல் பகு­தியை உள்­ள­டக்கி பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான 397 ஏக்­கர்­காணி மற்றும் அரச காணிகள் உட்­பட 617 ஏக்கர் வரை­யான காணியை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சிறீலங்கா கடற்­ப­டை­யினர் ஆக்­கி­ர­மித்து பாரிய கடற் ­ப­டைத்­த­ள­மொன்­றை அமைத்­துள்­ள­துடன் வட்­டு­வாகல் ஆற்­றுப்­ப­கு­தி­யிலும் கடற் ­தொ­ழிலை மேற்­கொள்­வ­தற்கு மீன­வர்­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதனையடுத்தே இந்த போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here