
இதில் விடத்தல் தீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கீச்சான் (வயது 35) என அழைக்கப்படும் கடற்தொழிலாளியான குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
மேற்படி பகுதியில் பிரஸ்தாப மீனவர் தனது படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கைக் கடற்படையினரின் அதிவேக படகு வேகமாக வந்து மோதியுள்ளது.
இதன்போது நிலை குலைந்து கடலில் வீழ்ந்த மீனவர் கடற்படையினரின் அதிவேக படகின் மோட்டார் விசிறியால் வெட்டுண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மீனவரின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு மரண விசாரணைக்காக விடத்தல் தீவு பள்ளமடு வைத்தியசாலை யில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்ப வம் தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.