கேப்பாபுலவு மக்களின் காணிகள் நாளை விடுவிப்பு ?

0
208

கேப்பாப்புலவு –பிலக்குடியிருப்பில் விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதற்கமைய மக்களின் காணிகள் நாளையதினம் கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலா ளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்க ளுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த காணிகளை நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று காலை அளவீடு செய்தனர்.
இதனையடுத்தே காணிகள் நாளைய தினம் விடுவிக்கப்படும் என முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குண பாலன் தெரிவித்தார்.
பிலக்குடியிருப்பில் மக்களின் காணிகள் எல்லைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளை எல்லை ப்படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 4 ஆம் திகதிக்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வர் நேற்றையதினம் தெரிவித்த நிலையில், அப்பகுதி மக்கள் இன்று 29 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி ன்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய தற்போது காணிகளை எல்லைப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிலக்குடியிருப்பு பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், விமானப்படையினரோடு இணை ந்து காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here