காணாமற்போன பலர் வெளிநாடுகளிலாம்: ரணில்!

0
496
யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் கடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் படையினரிடம் சரணடைந்த நிலையிலும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுபவர்களில் பலர் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வவுனியாவில் காணா மல்போனோரின் உறவினர்கள் காலவரையரையற்ற உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தாமதமின்றி தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றில் வலியுறுத்திய போது, அதற்குப் பதிலளித்துள்ள  பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
தங்களது காணாமற்போன பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரிந்துகொள்ள உறவினர்களுக்கு உரி மையுள்ளது. எனினும் இந்த மிகப்பெரிய பிரச்சினைக்கு நாம் இதுரை எவ்வித நியாயமான தீர்வும் வழங்கவில்லை. நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்ற சமயத்தில் கணாமற்போனோர் தொடர்பில் நீங்கள் வெளியிட்ட தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே காணாமற்போனோரது உறவினர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. பதிலளிப்பதில் ஏற்படும் தாமதம் அந்த மக்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு காரணமாக அமை ந்துள்ளது. இது தொடர்பில் பிரதமரின் பதிலை எதிர்ப்பார்க்கின்றேன்.“ என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
ஜே.வி.பி தலைவரின் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல்போனதாகத் தெரிவி க்கப்படும் பலர் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் எம்முடன் கலந்துரையாடினார். பொலிஸ் மா அதிபர் தன க்கு தெரிந்த தகவல்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் சுவாமிநாதன் வவுனியா செல்லவுள்ளார். இலங்கையில் இருப்பவர்கள் தொடர்பில் தெரிந்த தகவல்களை தர முடியுமெனவும் நாட்டில் இல்லாதவர்கள் தொடர்பில் எதுவும் செய்யமுடியாது எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் சட்டரீதியாக வெளிநாடு சென்றதற்கான தகவல்கள் கூட இல்லை. அவர்கள் படகுகள் மூலமாகவா அல்லது எவ்வாறு சென்றார்கள் என்பது தொடர்பி்ல் எதுவும் தெரியாது. பொலிஸார் தமக்கு தெரிந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியி ருக்கின்றார்கள். தமது உறவுகள் வெளிநாடு சென்றிருக்கலாம் என்ற நம்பிக்கை பலருக்கு காணப்படுகின்றது. அதிலேயே சிக்கல் நிலை காணப்படுகின்றது.
அவர்கள் தற்போது உயிருடன் இருப்பவர்கள் மத்தியில்  இல்லை. ஆகவே அவ்வாறு சாட்சிகள் இல்லாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நட்டஈடு தொடர்பில் ஆராய வேண்டும். அவர்கள் தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும். அவர்கள் நாட்டிலும் இல்லை, சட்ட ரீதியாக நாட்டைவிட்டு வெளியேறவும் இல்லை எனக் கூறமுடியும். பொலிஸாரும் அதனையே கூறுகின்றனர். இது தொடர்பில் பேசி தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here