தண்டவாளத்தில் பாய்ந்த செந்தூரனை மறந்து விட்டோமா நாம்? 

0
238
 senthooran
“தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு” “ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்து இன்றுடன் 26.11.2016 ஒருவருடம் ஆகிறது.
கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற அந்த துயரச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் கோப்பாயைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) என்ற மாணவரே தற்கொடையாக தன்னுயிரை கொடுத்தவராவார்.
மாணவன் தான் உயிரிழக்க முன்னர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் ஓராண்டு கடந்தும் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் மிகத் துயரமானது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளின் மீள் நினைவுகள்,  
‘அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி’ நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் (political prisoners) புனர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் “ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக (immediately) விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும்கூட (understand) இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. The goverment must deliver all tamil political prisoners immediately என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும் உண்மையுள்ள செந்தூரன்” – என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here