அனைத்துலக தமிழ் மொழித் தேர்வு 2016 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

0
934

logo edcதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2016 – 28 ஆயிரம் மாணவர்களின் பெறுபேறுகள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.06.2016 யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்சியம், பின்லாந்து,  நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் 28 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இத் தேர்வு எழுதிய 28 ஆயிரம் மாணவர்களின் பெறுபேறுகளும் 22.08.2016 தமிழர்
கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அந்தந்த நாட்டு கல்விக்கழகங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
04.06.2016 அன்று நடைபெற்ற தமிழ்மொழித் தேர்வுக்கான வினாத்தாள்கள்
யாவும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அணியம் செய்யப்பட்டு
அனைத்துக்கல்விக் கழகங்களுக்கும்; வழங்கப்பட்டு தேர்வின் பின் விடைத்தாள்கள் யாவும்
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையிடம் கல்விக் கழகங்களினால் ஒப்படைக்கப்பட்டன.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் விடைத்தாள்களுக்கான விடைகள்யாவும்
ஒழுங்கமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு பல நாடுகளிலிருந்தும் வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்கள்; திருத்தப்பட்டன.
இத்தேர்வின் பெறுபேறுகளில் இருந்து மாணவரினதும் பெற்றோர்களினதும் தமிழ்மொழி மீது கொண்ட பற்றையும் கல்விக் கழகங்களினதும்
ஆசிரியர்களினதும் இனப்பற்றையும் மொழிப்பற்றையும் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
வளர்தமிழ் நூல்களைப் பயன்படுத்தி இத்தேர்வில் பங்கேற்க வைக்கின்ற
கல்விக்கழகங்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும்
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை
வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறிக்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here