கொலம்பியாவில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பிய நாட்டு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய உலங்குவானூர்தியை தாங்கள் கண்டறிந்துள்ளதாக,அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த உலங்குவானூர்தியில் இருந்த 17 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் கொலம்பியா இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மோசமான வானிலையே உலங்குவானூர்தி விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக கொலம்பிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு கொலம்பியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பணி நடவடிக்கையின் போது கொலம்பிய உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதால், 16 காவல்துறையினர் உயிரிழந்தனர்.