உடல்நிலை பாதிப்படைந்து 6 கைதிகள் மயக்கமடைவு 16-வது நாளாக தொடரும் பரிதவிப்பு!

0
264
aaaa-prisonபுதிய மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளில் 6 பேருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் நேற்றையதினம் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
புதியமகசின் சிறைச்சாலையில் உள்ள 14 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 23 ஆம் திகதியில் இரு ந்து உணவு தவிர்ப்புபோராட்டத்தை ஆர ம்பித்து இன்றையதினம் 16ஆவதுநாளாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொட ர்ந்துள்ளனர்.
இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில்; ஈடுபட்டிருந்;த சி.தில்லராஜ்,ந.குகநாதன், மு.சிவநாதன், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தி.மனோகரன்ஆகியோர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் நேற்றையதினம் இரவு சிறைச் சாலை வைத்தியசாலைக்குஎடுத்துச்செல்லப் பட்டுள்ளனர்.
14 கைதிகளினதும் உடைநிலைமிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த போது இவர்கள் இதுவரை மருத்துவ உதவியை பெற்று வந்தனர். கடந்தசிலநாட்களாக மருத்துவ உதவியை பெறமாட்டோம் என சிறைச் சாலை ஆணையாளரிடம் கடிதம் ஒன்றி னை கையளித்திருந்தனர். ஆனால் வைத்தி யர்க ளின் கட்டாயத்தின் அடிப்படையில் அவர்க ளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைதினம் இவர்களை பாராளு மன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சார்ல்ஸ் மற்றும் ச.வியாளேந்திரன் ஆகி யோர் நேரில் சென்றுசந்தித்துகலந்துரை யாடியுள் ளனர்.உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதி கள் அனைவரும் மிகவும் உடல் நிலைபாதி க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பிணையில் அல்லது புனர்வாழ்வளிக்க ப்பட்டு விடுதலை செய்யுமாறுகோரி தமது போராட்டத்தை தொடர்ந்துள்ளதாகவும் தம க்குசாதகமானபதில் கிடைக்க வில்லை யெனில் சிறைக்குள்ளேயே தமது உயிரைமாய் க்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here