
இந்த காணி அளவீடு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கு அப்பகுதிமக்கள், தேவாலய நிர்வா கத்தினர்நிறுத்துவதற்கு அப்பகுதி மக்கள், தேவாலய நிர்வாகத்தினர், மற்றும் அரசியல் வாதிகள் அனைவரினையும் ஒன்றிணையுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற அமைப்பு முன்னர் கோரிக்கை விடுத்த நிலையில், மக்கள் திரண்டு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இதனால் நேற்றைய தினம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதனை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் எதிர்ப்பினை ஓரளவிற்கு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் கடற்படைக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் தேவைகளு க்காக பொது மக்களினது காணிகளைச் சுவீக ரிக்கும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந் நிலையில் குறித்த இடங்களில் நில அள வைத் திணைக்களத்தினர் அளவீடு செய்வத ற்குச் சென்றபோது அங்கு திரண்ட பொது மக்களினாலும் அரசியல்வாதிகளினாலும் தடுத்த நிறுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் நல்லாட்சியில் பொது மக்க ளின் சொத்துக்களை ஆக்கிரமிக்க மாட்டோம், பொது மக்களிற்கு பாதுகாப்பை வழங்குவோம் எனக் கூறிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அதே நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்க ப்பட்டு வருகினறது.இதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினமும் சேந்தான்குளத்தில் காணி அளவிடும் முயற்சிகள் மேற் கொள்ள ப்பட்டிருந்தன.
இதே போன்று வலி தெற்கின் திருவடி நிலைப் பகுதியிலும் எதிர்வரும் 10 ஆம் திகதி 11 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக்கும் வகையில் நில அளவைத் திணைக்களத்தினரால் காணிகள் அளவீடு செய்யப்பட இருக்கின் றன. இது தொடர்பாக நில அளவைத் திணை க்களத்தினரால் அரச அதிபர் உள்ளிட்ட தர ப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கி ன்றது குறிப்பிடத்தக்கது.