வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள்!

0
10

தமிழ் மக்களது விடிவிற்காகத் தமது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் நாள் தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட இருக்கின்றது.

அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் இடம்பெற்று வருகின்றன

அந்த வகையில் இன்று (05) வியாழக்கிழமை காலை வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன

வழமை போன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பணிக்குழு தங்களை தயார் படுத்தி வருவதாகவும் வருகின்ற 10.11.2026 மாபெரும் சிரமதானப்பணி ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதான பணிகள் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here