
கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு, வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையிலுள்ள பகுதியில் நேற்றைய தினம் 02/11/2026 (திங்கள் கிழமை) சிரமதானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது இப்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதால், கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் துயிலும் இல்லத்திற்கு மிக அருகாமையில் உள்ள காணிப் பகுதியில் நினைவேந்தல் திடலை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நமது மண்ணின் மைந்தர்களின் தியாகங்களை நினைவுகூரும் இந்தப் புனிதமான நாளில், ஈகியர் நினைவைப் போற்றுவோம்.!



