
பிரான்சின் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26.10.2026) திங்கட்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பிரான்சு பந்தன் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக குறித்த மாவீரர்களின் கல்லறைமீது தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டது.
பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை துணைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
கப்டன் கஜன் , லெப்.கேணல் நாதன் கல்லறைகளுக்கு கப்டன் கஜன் அவர்களின் ககோதரர்கள் லெப்.கேணல் நாதன் அவர்களின் சகோதரி ஆகியோர் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
நினைவுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாக ஒருங்கிணைப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஆற்றி இருந்தார்.
இவர் தனநு உரையில், குறித்த மாவீரர்களின் செயற்பாடுகள் பற்றியும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இவர்களின் செயற்பாடுகளுக்கு உயர் மதிப்பளித்தலைச் செய்திருந்தமை குறித்தும் தெரிவித்த அவர், குறித்த மாவீரர்களின் செயற்பாடுகளைத் தொடரவேண்டியதே இம்மாவீரர்களுக்கு நாம் செய்யும் மதிப்பளிப்பாகும். என்றார்.
தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நிகழ்வு நிறைவடைந்தது.


