
இந்திய இராணுவத்தினால் (IPKF) சாவகச்சேரி சந்தையில் நிகழ்த்தப்பட்ட கொடூரப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மாலை 5.45 மணியளவில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை தவிசாளர், உபதவிசாளர், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நமது மண்ணில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளும், சிந்தப்பட்ட தமிழ் மக்களின் குருதியும் எக்காலத்திலும் மறக்கப்பட முடியாதவை!
#


