சிறீலங்காவின் ஒத்துழைப்போடு இந்திய இராணுவத்தால் சாவகச்சேரியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவு!

0
8

சிறீலங்கா அரசினது பரிபூரணமான ஒத்துழைப்போடு இத்தாலியப் படஎமது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 ஆண்டுகள்.

படுகொலை செய்த இந்தியப்படைகளுக்கும் தண்டனை இல்லை. இப்படுகொலையிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியது மட்டுமன்றி, தமிழ் மக்களை கொலை செய்தேனும் புலிகளை அழிக்க அனுமதி வழங்கிய சிறீலங்க அரசுக்கும் தண்டனையில்லை.

உரிமைக்காகப் போராடிய மக்களுக்கு நீதியான தீர்வும் இல்லை.

படுகொலை சம்பவம் நடைபெற்று 39 ஆண்டுகளாகியும். சிறீலங்கா அரசின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலம் இன்றும் இல்லாத நிலையே நீடிக்கின்றது.

உரிமைக்கான போராட்ட காலத்தில் விடுதலைப் போராட்டத்தின் கவசமாக எமது மக்கள் இருந்தார்கள்.

இம்மண்ணில் வாழ்ந்த ஒரு காரணத்திற்காகவே இவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

உயிர்நீத்த எமது மக்களது ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன்,

எமது தேசத்தின் அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here