
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (19/10) இடம்பெற்றது .

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


