
இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்திச் செல்லப்பட்ட பெண் கிராம சேவையாளர் வைத்திய பரிசோதனைகளுக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் புதுக்குடியிருப்புப் பொஸிஸாரினால் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.