
பிரான்சில் தமிழ் பெண்கள் அமைப்பு வருடாந்தம் நடாத்தும் தேசவிடுதலை பாடலுக்கான நடனப்போட்டி வன்னிமயில் 2025 – 7ஆம் நாள் போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.

ஈகைச்சுடரினை 02.04.2000 அன்று இத்தாவில் – பளைப் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்டினன் காண்டீபனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.


இன்றைய போட்டியில் அதிமேற்பிரிவு அ,ஆ,இ,ஈ,உ பிரிவின் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து எதிர்வரும் 01.03.2025 சனிக்கிழமை 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள் ஒள்னேசுபுவா பகுதியில் இடம்பெறவுள்ளன.

























