
எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் இம்முறை மீண்டும் தொடருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

03.03.2025 திங்கட்கிழமை Gare de Lyonனில் இருந்து காலை 08.18 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11.29 மணிக்கு ஜெனிவாவைச் சென்றடையும் தொடருந்து, மீண்டும் அன்று இரவு 18.29 மணிக்கு ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு 21.42 மணிக்கு Gare de Lyon ஐ வந்தடையவுள்ளது.
இதற்கான பயணச் சீட்டுக்கள் தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றோடு அல்லது பிரதேச செயற்பாட்டாளர்களோடு தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
பயணச் சீட்டுக்களை விரைந்து பெற்று உங்கள் பயணத்தை உறுதிசெய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.