
தங்கள் சொந்த மண்ணில் கால்பதிக்க முடியாமல், சொந்தக் காணிகளுக்குத் திரும்ப முடியாத வேதனையோடு வடக்கு மக்கள் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
#யாழ்ப்பாணம், #மயிலிட்டிப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, மயிலிட்டி மக்களின் அறப்போராட்டம் இன்று 29ஆவது வாரமாகவும் மிக உறுதியோடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!
“மாற்றம்” என்ற ஒற்றை வார்த்தையை நம்பி, புதிய அநுர அரசாங்கத்திற்கு (NPP) வாக்களித்த மக்களுக்கு இன்று ஏமாற்றம் மட்டுமே மிச்சமாகியுள்ளது. ஆட்சி மாறினாலும் வடக்கு மக்களின் நில உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டாக்கனியாகவே தொடர்கின்றன.
இராணுவ மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களின் வாழ்வாதார நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்த மக்களின் நியாயமான போராட்டத்திற்கு நாமும் ஆதரவளிப்போம்!
இவர்களது பூர்வீக நிலங்கள் உடனடியாக முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்!


