புதிய பிரதேசசபை உறுப்பினர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்!

0
16

பிரதேசசபைத் தேர்தல்கள் முடிவுற்று தேர் தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. புதிதாகப் பிரதேசசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகக் கூடிய அக்கறை காட்டி தங்கள் தங்கள் பிரதேசங்களை முன் னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள் என வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று (12) வவுனியா இந்துக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையா ற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இயலக்கூடியளவு பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடவும் அவர்களின் குறைக ளைக் கேட்டறியவும் விருப்பமுள்ள போதும் சில நேரங்களில் அது தனது சக்திக்கு அப்பாற்பட்ட சில காரணிகளால் இயலாமல் போய்விடுகி ன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரின் பின் நாம் தமிழரெனத்தலை நிமிர்ந்து வாழும் காலம் உதயமாகியுள்ளது. எமது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நாட்டின் விளையாட்டு அணிகளில் சேர்க்கப் பட்டு தமது சிறப்பை வெளிக்காட்டி வருகின் றார்கள். நாம் யாவரும் எமது சிறப்புக்களை ஊரறிய உலகறிய வெளிக்காட்ட வேண்டிய காலம் இப்பொழுது மலர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here