அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு!

0
271

கிளிநொச்சி, அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட பெருங்காட்டு பகுதிக்குள் நுழையும் அடையாளம் தெரியாத கும்பலொன்று அந்தப் பகுதியில் உள்ள பாலை, முதிரை உள்ளிட்ட பெறுமதியான மரங்களை அழித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த காட்டு பகுதியிலுள்ள பெரிய மரங்களில் மர்மக்குறியீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்தோடு குறித்த அடையாளம் தெரியாத கும்பல் அந்த காட்டுப் பகுதியிலேயே தங்கி இருக்கும் தடயங்களும் அங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு விரோதமான செயற்பாடுகள் தொடர்ந்தால் குறித்த மாவட்டம் இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவில் முகம் கொடுக்க வேண்டி வரும் சாத்தியக்கூறு இருப்பதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த மாவட்டம் ஆண்டின் நடுப்பகுதியில் கடும் வறட்சி நிலையை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here