கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள இளைஞர்,யுவதிகளும் நேரில் சென்று ஆதரவு

0
188


கேப்­பாப்­பு­லவு, பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் தமது சொந்த நிலங் ­களை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை விடு­விக்­க­வேண்­டு­மெ­னக்­கோரி கடந்த வெள்ளி (24) 25 ஆவது நாளாக தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
வீதி­யோ­ரத்தில் வெயில், கொட்டும் பனி மற்றும் இன்­னோ­ரன்ன இன்­னல்­க­ளை­யெல்லாம் தாண்டி சொந்­த­மண்ணில் கால்­ப­திக்க வேண்டும் என்ற பேரா­சை­யுடன் இவர்­க­ளது அற­வழிப் போராட்டம் தொடர்­கின்­ற­போ­திலும் இது­வரை தீர்வு எதுவும் கிடைக்­க­வில்லை.
தென்­ப­கு­தியை சேர்ந்த சிங்­கள, தமிழ் இளை­ஞர்கள் நேற்­றைய தினம் கேப்­பாப்­பு­லவு மக்­களின் போராட்ட களத்­துக்கு வரு­கை­தந்து மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் தமது ஆத­ர­வி­னையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். மொன­ரா­கலை பகு­தியை சேர்ந்த சிங்­கள மற்றும் தமிழ் இளைஞர் யுவ­தி­களே இவ்­வாறு வருகை தந்­தி­ருந்­தனர்.
இதன்­போது போராட்­டத்தில் ஈடு­படும் மக்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட சிங்­கள இளைஞர், யுவ­திகள் தற்­போது நேரில் வந்து பார்க்கும் போதுதான் தமிழ் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை புரிந்­து­கொள்ள முடி­கின்­றது எனவும் தென்­ப­கு­தியில் வட பகுதி தமிழ் மக்கள் பற்றி தவ­றான செய்­திகள் பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் நேரில் இந்த மக்­களின் அவ­லங்­களை பார்க்­கும்­போது அது அனைத்தும் வதந்­திகள் என்­பது புரி­கின்­றது எனவும் தெரி­வித்­தனர்.
அத்­தோடு நேற்­றைய தினம் பல்­வேறு பகுதிகளிலிருந்து வருகைதந்த அருட்தந்தையர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here