திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நேற்று 7 ஈழத் தமிழர்கள் விடுதலை!

0
140

இந்தியா, தமிழகம் – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து நேற்று 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டு மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறப்பு முகாமில் தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஏழு பேருக்கு விடுதலைக்கான உத்தரவு ஆவணங்கள் கிடைத்ததை அடுத்து, அவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here