நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் !

0
82

நெதர்லாந்தில் 08-03-2023 புதன் அன்று சர்வதேச  மகளிர் தினம் சிறப்பாக  நடைபெற்றது.

சுமார் 19.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு பல்லினப் பெண்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நெதர்லாந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் தாயகத்தில் பெண்களின் நிலைபற்றியும் தெளிவாக எடுத்தியம்பப்பட்டது.

தமிழினத்தின் நிலை பற்றியும் தமிழினத்தின் எதிர்பார்ப்பு பற்றியும் வந்திருந்த வேற்றின மகளிரும் ஆர்வத்துடன் கேட்டு அறிந்துகொண்டார்கள்.

சுமார் எண்பது வேற்றினப் பெண்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வு கலந்துரையாடலாக நடைபெற்று சுமார் 21.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here