பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமானார்!

0
162

சென்னை: அழியாத கோலங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பழம்பெரும் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69.

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் பிரதாப் போத்தன்.

1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

சென்னையில் வீடு தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் பிரதாப் போத்தன் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தான் உயிர் துறந்துள்ளார். அவரது உடல் தற்போது இறுதி அஞ்சலிக்காக அங்கே வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகம் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த படையெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here