யாழ்.மிருசுவிலில் சிறிய பிள்ளையார் ஆலயம் இடித்தழிப்பு!

0
358

யாழ்ப்பாணம் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக அமைந்துள்ள சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தினை நேற்றுமுன்தினம் இரவு விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை ஆலயம் இடித்தழிக்கப்பட்டதை அவதானித்த அயலவர்கள் இது தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here