வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!

0
304

வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் படி கலை,வர்த்தகம், உயிரியல் பிரிவுகளில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடங்களை பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வர்த்தகப் பிரிவு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் துரைராஜா யுகதீஸ்வரன் வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 143 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். வவுனியா இறம்பைகுளம் மகளீர் மகா வித்தியாலய மாணவி சிறிசேன மதுசா மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையையும். வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய் மாணவன் செல்வராஜா மனோச் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர். உயிரியல் பிரிவு உயிரியல் பிரிவில் தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் அருட்செல்வன் உதிஸ்ரன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். உயிரியல் பிரிவில் தமிழ் மத்திய மகாவித்தியாலத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அபியுக்தன் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையும், அகில இலங்கை ரீதியில் 62ம் இடத்தையும், யோகநாதன் தாருணன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையும் அகில இலங்கை ரீதியில் 500 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். கணிதப் பிரிவு கணிதப் பிரிவில் இறம்பைகுளம் மகளீர்வித்தியாலய மாணவி யெஜக்குமாரன் பூஜிதா மாவட் டமட்டத்தில் முதலாம் இடத்தையும் அகிலஇலங்கை ரீதியில் 14 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார் தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களான மகேந்திரராஜா யாதவன் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையும், அகில இலங்கை ரீதியில்94ம் இடமும், மதனகுமார் மோகிசன் மாவட் மட்டத்தில் மூன்றாம் நிலையும் அகில இலங்கை ரீதியில் 154 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். கலைப்பிரிவு கலைப்பிரிவில் தமிழ்மத்திய மகா வித்தியாலய மாணவி டிலாஜினி சண்முகேஸ்வரராஜா மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கையில் 35 ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here