கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
352

கடும் பனிப்பொழிவின் காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வான்வழி, ரயில் மற்றும் தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும் பனிப்பொழிவு இருக்குமென்றும், மற்ற இடங்களில் இரவு முழுவதும் பனியின் தாக்கம் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு “விழிப்புடன் இருப்பதற்கான” மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் திங்களன்று மூடப்படும். ஹீத்ரூ உட்பட பல விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓடுபாதைகளில் படிந்துள்ள பணியை அகற்றுவதற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
`

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here