உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் – பிள்ளைகள் இருவரையும் இளஞ்செழியன் தத்தெடுப்பு!

0
603

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச் சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

தனது மெய்ப்பாதுகாவலராக 17 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை நேற்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம் பெற்றது.

குறித்த இறுதிக் கிரியையில் கலந்து கொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை நீத்த எனது மெய்ப்பாதுகாவலருக்கு செய்யும் கடமையாக நான் இதனை கருதுகிறேன்.

அந்த வகையில், குறித்த இரு பிள்ளைக ளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல பராமரித்து, அன்பு செலுத்தி, கல்வியை போதித்து, நான் இறக்கும்வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங் களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வேன் என  நீதிபதி இளஞ்செழியன் ஊடகங்களிடம் உறுதிபடத் தெரிவித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here