
கலை இலக்கியப் படைப்புகள் போராட்ட வாழ்வின் உண்மைகளைத் தரிசித்து நிற்க வேண்டும்’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப சுவிஸ் நாட்டிலே தமிழர் நினைவேந்தல் அகவத்தினால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி ஆண்டுதோறும் நடாத்தப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான கவுதைப்போட்டி 01.11.2026ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் நாடுதழுவிய வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தாய்மொழிஇ தமிழீழம்இ தமிழீழத் தேசியத் தலைவர்இ தமிழீழத் தேசிய மாவீரர் ஆகிய விடயப்பரப்புகளில் கவித்தலைப்புகள் வழங்கப்பெற்றது. போட்டியாளர் தமது வயதுப்பிரிவுக்குக் கொடுக்கப்பெற்ற தலைப்புகளுள் ஒன்றினைத் தெரிவுசெய்து கவிதை எழுதிஇ அதனைப் பாடியும் காண்பித்தனர். அவர்களுள் மிகச்சிறப்பாக அளிக்கை செய்தோர் வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்பெற்றனர்.

2026ஆம் ஆண்டுக்கான எழுச்சிக்கவி விருதினை திருமதி. ரஞ்சன் பத்மலோஜனி அவர்கள் தனதாக்கிக்கொண்டார். வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் 27.11.2026ஆம் நாள் பாசல் மாநகரில் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வழங்கப்படும்.
புலம்பெயர் நாட்டிலே பிறந்து வளர்ந்தாலும் தம் இன அடையாளங்களையும் மாவீரர் தியாகங்களையும் அறிந்தவர்களாகவும் கவிபாடும் ஆற்றல் மிக்கவர்களாகவும் தம் பிள்ளைகள் வளர வேண்டும் என்ற உயரிய இலக்கோடு அயராது உழைக்கும் பெற்றோர்களைப் பாராட்டுகின்றோம். ஆர்வத்தோடு போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களையும் அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களையும் வாழ்த்துகிறோம்.
கவிதைப்போட்டி எழுச்சியோடும் நேர்த்தியாகவும் நடைபெற உழைத்த இளையோர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் எமது அகம் நிறைந்த பாராட்டுகள்.

உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் தமிழீழ விடுதலைக்கு உரமாக்கி தொடர்ந்தும் பணியாற்றவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


