மூளாய் வைத்தியசாலைப் படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்!

0
20

-05 நவம்பர் 1987-

மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசச்செயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்கும் இடமாக மூளாய் வைத்தியசாலை அமைந்துள்ளது.

பெரும் இன்னல்களுக்கும், பெரும் மருத்துவ நெருக்கடிகளுக்கும் மத்தியில் வாழ்ந்த மூளாய்க் கிராமத்து மக்கள், 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் சிகிச்சைக்காக மூளாய் வைத்தியசாலையில் இருந்தபோது இந்திய இராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதலிற்குள்ளாகினர்.
இதில் நாகர் மகேந்திரன் 44 வயது, கந்தையா மகாதேவன் 48 வயது உட்பட
ஐந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தார்கள். மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்தது.

பௌத்த சிங்கள இனவெறி சிறிலங்கா அரசும்,இந்திய வல்லாதிக்கமும் இணைந்து நடத்திய தாக்குதல்களில் படுகொலைச் செய்யப்பட்ட தாய்த்தமிழ் உறவுகளுக்கு எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here