மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்!

0
19

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்களின் விடிவிற்காகத் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனிதமான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றைய தினம் 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு_தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள், தடைகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என அத்தனையையும் தாண்டி, மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தியவாறு பொதுமக்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இந்த தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட போதிலும், தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் அழியாத எமது மாவீரச் செல்வங்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் இப்புனிதப் பூமியில், வரும் நவம்பர் 27 அன்று கார்த்திகை தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here