பிரான்சில் நாளை இடம்பெறவுள்ள திருக்குறள் திறன் இறுதிப் போட்டிகள் !

0
40

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிமாணவர்களிடையே நடாத்தப்படும் திருக்குறள் திறன் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் பிரான்சு மட்டத்தில் நாளை (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ÉCOLE ÉLÉMENTAIRE JULES-FERRY 2 RUE ROBERT-PLANQUETTE 93150 LE BLANC-MESNIL பகுதியில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளன.
திணைக்களமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள் கடந்த (18.10.2026) ஞாயிற்றுக்கிழமை நுவாசியல் பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
முன்னதாக தமிழ்ச்சோலைப் பள்ளிகளிலே பள்ளிமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன்போட்டிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே குறித்த திணைக்களமட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
திணைக்களமட்டப் போட்டிகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே நாளை (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு மட்டத்திலான திருக்குறள் திறன்போட்டிகளில் பங்குகொள்ளவுள்ளனர்.

நடைபெறவுள்ள திருக்குறள் திறன் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் தகவல்களை இத்துடன் இணைக்கின்றோம்.

கடந்த 18-10-2026 அன்று நடைபெற்ற திணைக்கள மட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும், வெளி மாகாணத் தமிழ்ச்சோலைகளின், தமிழ்ச்சோலை மட்டத்திலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றுவர். போட்டியாளர்களின் தகவல்களை, தமிழ்ச்சோலைகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி இத்துடன் இணைக்கின்றோம்.

“நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here